தாய்லாந்தில் 'கபாலி' செய்த பிரமிப்பான சாதனை

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தியினை நேற்றே பார்த்தோம்.
இந்நிலையில் 'கபாலி' திரைப்படத்தை திரையிட இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழ்ப்படம் வெளியிடாத நாடுகளில்கூட 'கபாலி' படம் வெளியாகவுள்ளதாகவும், ஏற்கனவே தமிழ்ப்படம் வெளியான நாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 'கபாலி' திரைப்படம் தாய்லாந்து நாட்டில் வெளியாக இதுவரை 300 திரையரங்குகள் புக் செய்யப்பட்டிருப்பதாகவும் ரிலீஸ் தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் நூறு ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் தாய்லாந்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜூலை 22: ஒரே நாளில் இணையும் ரஜினி-விஜய்-தாணு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை பார்த்தோம். சென்சார் சான்றிதழ் கிடைத்ததும்...

விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் சூர்யா வில்லன்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன்...

'கபாலி' ரிலீஸ் தேதி. கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதையும் இந்த படம் 152 நிமிடங்கள் ஓடவுள்ளதாகவும் வந்த அதிகாரபூர்வ செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்...

'கபாலி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் சென்சார் இன்று நடைபெற்று வருவதாக ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்த நிலையில்...

உலகிலேயே இதுதான் முதல்முறை. 'கபாலி' செய்துள்ள இன்னொரு சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் புரமோஷன்கள் இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் கூட கண்டிராத வகையில் வானத்திற்கும் பூமிக்கும் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன...