close
Choose your channels

'கபாலி' படத்தின் பஞ்ச் டயலாக் இதுதான்

Saturday, May 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் டீசர் உலக அளவில் பல சாதனைகள் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிக்காக இந்த படத்தில் வில்லனாக நடித்த தைவான் நடிகர் Winston Chao சமீபத்தில் சென்னை வந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் அவர் பேசிய பஞ்ச் டயலாக் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பஞ்ச் டயலாக் தான் இதுதான்: "ஒரே ஒரு நாள் விட்றேன். உன் குடும்பத்தோட ஜாலியா நிம்மதியா தூங்கு''. இதற்கு சூப்பர் ஸ்டார் என்ன பதிலடி பஞ்ச் வசனம் பேசினார் என்பதை படம் பார்த்துதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தனக்கு ஆங்கிலம், சீன, மலேயா மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் மொழியை கற்கும் வாய்ப்பு தனக்கு இல்லை என்றும் அதனால் தமிழில் டப் செய்வது தனக்கு மிக கடினமான பணியாக இருந்ததாக Winston Chao தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை போல பல வெளிநாட்டினர் இதுவரை இந்திய படங்கள் என்றாலே இந்தி படங்கள் மட்டும்தான் என்று எண்ணி கொண்டிருந்ததாகவும், தற்போது இந்தி திரையுலகை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் திரைப்படங்கள் பிரபலமாக இருப்பதை கண்கூடாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு 'கபாலி' படத்தில் நடிக்கும் முன்னர் ரஜினிகாந்த் யார் என்பதே தனக்கு தெரியாது என்றும் இந்த படத்தின் இயக்குனர் தன்னை முதலில் சந்திக்க வரும்போது ரஜினிகாந்த் நடித்த சில படக்காட்சிகளை தன்னிடம் காண்பித்ததாகவும், அதன்பின்னரே ரஜினி குறித்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் பழகுவதற்கு ஒரு இனிமையான நபர் என்றும் தான் அனுபவமுள்ள நடிகராக இருந்தபோதிலும் ரஜினியிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் Winston Chao தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment