close
Choose your channels

கபாலி'யில் கலக்கும் பவர்புல் பெண்கள்

Saturday, July 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் காய்ச்சல் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படம் ரஜினியை மட்டுமே குறிவைத்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை தவிர மூன்று பவர்புல் பெண் கேரக்டர்கள் இருப்பதாகவும், அவர்களுடைய அதிகபட்ச உழைப்பு, ரசிகர்களை நிச்சயம் திருப்தி செய்யும் என்றும் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர்களின் கேரக்டர்கள் நிச்சயம் படம் வெளிவந்த பின்னர் பேசப்படும் என்று ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினியின் மனைவியாக குமுதவள்ளி கேரக்டரில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீனா என்ற முக்கிய கேரக்டரில் ரித்விகா நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் குறித்து ரஞ்சித் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளதாகவும் படம் வெளிவந்த பின்னர் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியவரும் என்றும் கூறப்படுகிறது.
'நல்லவனுக்கு நல்லவன்', 'மன்னன்', 'படையப்பா' உள்பட பல படங்களில் ரஜினிக்கு சமமாக நாயகிகளின் கேரக்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 'கபாலி' படத்திலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்குமா? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment