'கபாலி' தயாரிப்பாளரின் இரண்டாவது வழக்கு
Saturday, July 16, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்றும் அந்த மனுவில் தான் தயாரித்திருக்கும் 'கபாலி' படத்தை இணையதளங்களில் அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்வதை தடுக்க இந்தியாவில் இயங்கி வரும் 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதையும் மீறி வலைத்தளங்களில் கபாலி` படம் வெளியானால், சம்பந்தப்பட்ட வலைத்தளங்களை முடக்குவதற்கும், இணையதள சேவை நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை முதன்மை செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இன்று கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாவது மனுவில், 'கபாலி' திரைப்படம் பேருந்து, வாகனங்களில் ஒளிபரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் கேபிள் டிவிகளில் கபாலி படத்தை ஒளிபரப்புவதைத் தடுக்க டிஜிபிக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த இரண்டாவது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments