'கபாலி' தயாரிப்பாளரின் இரண்டாவது வழக்கு

  • IndiaGlitz, [Saturday,July 16 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்றும் அந்த மனுவில் தான் தயாரித்திருக்கும் 'கபாலி' படத்தை இணையதளங்களில் அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்வதை தடுக்க இந்தியாவில் இயங்கி வரும் 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதையும் மீறி வலைத்தளங்களில் கபாலி' படம் வெளியானால், சம்பந்தப்பட்ட வலைத்தளங்களை முடக்குவதற்கும், இணையதள சேவை நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை முதன்மை செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இன்று கலைப்புலி எஸ்.தாணு இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாவது மனுவில், 'கபாலி' திரைப்படம் பேருந்து, வாகனங்களில் ஒளிபரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் கேபிள் டிவிகளில் கபாலி படத்தை ஒளிபரப்புவதைத் தடுக்க டிஜிபிக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த இரண்டாவது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யாவின் 'S3' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

கோலிவுட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய சூர்யா தற்போது 'S3' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரியின்...

விஷ்ணுவின் 'மாவீரன் கிட்டு' உண்மைக்கதையா?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் பூஜை போடப்பட்ட 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு பழநி மற்றும்...

அஜித் படத்தில் அக்ஷராஹாசன்? மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்

தல அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 57' படத்தின் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியுடன் 2வது முறையாக இணைந்த மோகன்லால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தினம் நெருங்க நெருங்க ரசிகர்களிடம் டென்ஷன் ஏறிக்கொண்டே உள்ளது...

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை'...