சென்னையில் 'கபாலி' பிரிமியர் காட்சி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

வெளிநாடுகளில் ரிலீசுக்கு முந்தைய நாள் பிரிமியர் காட்சி திரையிடப்படுவதை போல சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பிரிமியர் காட்சிகள் ஜூலை 21ஆம் தேதி மாலை திரையிடப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் தரப்பு மறுத்துள்ளது. சென்னையில் பிரிமியர் காட்சிகள் திட்டமிடப்படவில்லை என்றும், ஜூலை 22ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் தாணு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் இந்த படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும், ஜூன் 22ஆம் தேதியும் வேறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் கிட்டத்தட்ட சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'கபாலி' ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும், நாடுகளிலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் உள்பட பல வசூல் சாதனைகளை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விக்ரம்-நயன்தாரா பார்ட்டியில் 2000 பேர்

முதல்முறையாக விக்ரம்-நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...

முதன்முதலில் 2வது நாயகன் வேடத்தில் சூரி

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சி மூலம் கோலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சூரி, தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் திட்டம்

கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மூன்று முன்னணி இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்த பெருமை 'நெஞ்சம் மறப்பதில்லை'...

சுசீந்திரன் -விஷ்ணு படத்தின் வித்தியாசமான டைட்டில்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில்...

'ரெமோ' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் எந்த அளவு புத்திசாலித்தனம் இருக்கின்றதோ, அதேபோல் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதிலும் படக்குழுவினர்...