சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'கபாலி' பிரிமியர்?

  • IndiaGlitz, [Thursday,July 14 2016]

புதிய படங்களின் பிரிமியர் காட்சிகள் இதுவரை வெளிநாட்டில் மட்டுமே நடந்து வருகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் படம் என்றாலே ஏதாவது ஒரு சாதனையை உடைக்க வேண்டும் அல்லது ஒரு புதிய சாதனனய ஏற்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கையில் பிரிமியர் காட்சியில் மட்டும் மாற்றம் இல்லாமல் இருக்குமா? ஆம் 'கபாலி' படத்தின் பிரிமியர் காட்சிகள் தமிழகத்திலும் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 22ஆம் தேதி 'கபாலி' ரிலீஸ் ஆகவுள்ள சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஜூலை 21ஆம் தேதி மாலையில் 'கபாலி' பிரிமியர் காட்சி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஏற்கனவே நடுநிசிக்காட்சி, அதிகாலை ஆகிய ரசிகர்கள் காட்சியும் வழக்கம்போல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகையில் தற்போது பிரிமியர் காட்சிகளும் எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

More News

முன்னாள் உலக அழகியுடன் இணைந்து நடிக்கும் நட்டி நட்ராஜ்

'சதுரங்கவேட்டை', 'கதம்கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் தற்போது 'போங்கு'...

விஜய்சேதுபதியுடன் இணைந்த 'இறைவி' நடிகை

'காக்கா முட்டை' என்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'குற்றமே தண்டனை'...

'கொடி: தனுஷின் இரட்டை வேட ரகசியம்

தனுஷ் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'கொடி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன்...

ஜோதிகாவின் அடுத்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை

பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா...

சென்னை மருத்துவமனையில் கமல் அனுமதி

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று இரவு தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியில் இறங்கி வரும்போது கால்தவறி கீழே விழுந்துவிட்டதாகவும்...