மலேசியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'கபாலி'

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மலேசியாவில் 12 மில்லியன் ரிங்கிட் வசூலாகியுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் ரஜினியின் 'எந்திரன்' மலேசியாவில் அதிகபட்சமாக 9.5 மில்லியன் ரிங்கிட் வசூலாகியுள்ள நிலையில் ரஜினி படத்தின் சாதனையை மற்றொரு ரஜினி படமே முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'கபாலி'யை அடுத்து எந்திரன், சிவாஜி, லிங்கா, கத்தி மற்றும் சிங்கம் 2 ஆகிய படங்கள் மலேசியாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'கபாலி' திரைப்படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.