ஜூன் 26-ல் 'கபாலி'யின் அடுத்த விழா

  • IndiaGlitz, [Tuesday,June 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் முதல் டீசர், இரண்டாவது டீசர், பாடல்கள் ஆகியவை வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜூன் 26ஆம் தேதி 'கபாலி' தெலுங்கு படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பாடல்கள் ரிலீஸ் விழாவாக நடைபெறுமா? அல்லது கபாலி' தமிழ் பாடல்கள் போல் ஆன்லைனிலேயே வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேபோல் 'கபாலி' படத்தின் இந்தி பாடல்கள் ரிலீஸ் விழாவும் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15-ல் வெளியாகும் என்று எத்ரிபார்க்கபடுகிறது.