'கபாலி': அமெரிக்க பிரிமியர் காட்சியில் ரஜினிக்கு ஆரவார வரவேற்பு

  • IndiaGlitz, [Thursday,July 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பிரிமியர் ஸ்பெஷல் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இந்த காட்சியை பார்க்க ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வந்திருந்தனர்.
ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையே 'கபாலி' படத்தை ரஜினிகாந்த் ரசித்து பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படம் பார்த்த முடித்தவுடன் இயக்குனர் ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் 'ரஜினிகாந்த் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ல் 'நிறைய முத்தங்களுடன் மகிழ்ச்சி' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பதிவு செய்துள்ளார். முன்னதாக திரையரங்கில் ரஜினிகாந்த் நுழைந்தவுடன் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தள்ளி போகிறதா பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை'?

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல எழுத்தாளர் வேலராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' படத்தை இயக்கவுள்ளதாக வந்த செய்தியையும்...

கூடங்குளத்துடன் கனெக்ஷன் ஆன தனுஷ் படம்

முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்...

அனிருத்தின் 'அஜித் 57' பாடல் குறித்த முக்கிய தகவல்

'தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதை...

'கபாலி'க்கு அடுத்த வாரம் 'கத்திச்சண்டை'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்டங்களுடன் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 'கபாலி'. ஒரு சிறப்பு பார்வை

கோலிவுட் திரையுலகில் தற்போது கிட்டத்தட்ட பாதி படங்களை பிரமாண்டம், பிரமாண்டம் என்றே கூறுகின்றனர்...