'கபாலி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.


சென்னை, மலேசியா, கோவா ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நாளை முதல் மலேசியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறும் என்றும் அத்துடன் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் ரஜினிகாந்த் '2.0' படத்தின் படப்பிடிப்பில் தனது முழுகவனத்தையும் செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தேவும் மகளாக தன்ஷிகாவும் நடித்து வரும் இந்த படத்தில் 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம், வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.