close
Choose your channels

இந்திய திரையுலகில் 'கபாலி' செய்த புதிய சாதனை

Monday, July 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய மக்கள் தொகையில் தமிழ் பேசுபவர்களின் மக்கள் தொகை வெறும் 5%தான். ஆனால் ஒரு தமிழ்ப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் சாதனை செய்துள்ளது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' செய்த சாதனை
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேசப்படும் இந்தி மொழி திரைப்படங்களின் சாதனையை கூட 'கபாலி' சர்வசாதாரணமாக முறியடித்துள்ளது. இந்த படம் அகில இந்திய அளவில் இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் முதல் மூன்று நாட்களில் 'கபாலி' திரைப்படம் 26 திரையரங்க வளாகங்களில் ரிலீஸ் ஆகி 991 காட்சிகள் திரையிடப்பட்டது. 98% திரையரங்க இருக்கைகள் நிரம்பியிருந்த நிலையில் இந்த படத்தின் முதல் வார இறுதியில் ரூ.3,82,61,405 வசூல் செய்துள்ளது. இந்த தொகை சென்னை ஒப்பனிங் வசூலின் புதிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment