close
Choose your channels

'கபாலி' இசைவெளியீட்டு விழாவில் திடீர் மாற்றமா?

Tuesday, June 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 12ஆம் தேதி நடைபெறும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூகவலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தாமல் நேரடியான ஆன்லைனிலேயே பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அன்றைய தினமே கடைகளில் இந்த படத்தின் ஆடியோ சிடி கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இயக்குனர் ரஞ்சித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படத்தின் போஸ்ட்புரடொக்ஷன்ஸ் பணிகளில் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர். ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் வியாபாரமும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment