உலகின் முதல் 'கபாலி' காட்சி எங்கு எத்தனை மணிக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக ஜூலை 22 என்று கன்பர்ம் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அந்த தேதி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜூலை 21ஆம் தேதியே ஒருசில நாடுகளில் இந்த படத்தின் பிரிமியர் காட்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி உலகின் முதல் 'கபாலி' திரைப்பட காட்சி சிங்கப்பூரில் ஜூலை 21ஆம் தேதி அந்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் முதல் பிரிமியர் காட்சி திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை முந்தைய நாள் நடுநிசி காட்சி அல்லது 22ஆம் தேதி அதிகாலை காட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.