கபாலியுடன் கனெக்சன் ஆன 'அஜித் 57'
- IndiaGlitz, [Tuesday,June 21 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளிவந்து ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இளமைக்கால ரஜினி, வயதான கேங்ஸ்டர் ரஜினி என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் ரஜினியை அசத்த வைத்ததில் பெரும்பங்கு இந்த படத்தின் காஸ்ட்யூமர் டிசைனர் அனுவர்தன் அவர்களை சேரும்.
இந்நிலையில் 'கபாலி'க்கு அடுத்ததாக அனுவர்தன் 'அஜித் 57' படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரியவுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே இவர் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, அஜித் போன்ற பெரிய ஸ்டார்களை அழகாகவும், ஸ்டைலிஷாகவும் ஆக்கிய அனுவர்தன் மீண்டும் அஜித்தை வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களுக்கு காட்சியளிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.