சென்னையில் 'கபாலி'யின் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,August 15 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்தது. இன்று இந்த படம் 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் 'கபாலி' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 110 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.27,01,440 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னையில் 'கபாலி' திரைப்படம் மொத்தம் ரூ.11,88,04,610 வசூலாகியுள்ளது. சென்னையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் 'கபாலி'தான் அதிக வசூல் செய்து புதிய சாதனை செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகெயனின் 'ரெமோ'

சிவகார்த்திகேயன் முதன்முதலாக நர்ஸ் உள்பட பல வித்தியாசமான வேடங்களில் நடித்த 'ரெமோ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை தவிடுபொடியாக்கி வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இன்று முத்துகுமாரிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல இருந்தேன். ஆர்.பார்த்திபன் வேதனை

பிரபல பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவிற்கு கோலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் ...

முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல்ஹாஸன்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் மறைவால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அவரது மறைவிற்கு கோலிவுட்டின் பிரபலங்கள்...

'தனி ஒருவன்' நிறுவனத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது...