'கபாலி'யுடன் இணைந்த 'தனி ஒருவன்'

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ஜூரம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய அனைவரும் கம்ப்யூட்டர் முன்னர் கண்ணிமைக்காமல் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் சென்னையை விட மிக அதிக வசூல் தரும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது ரஜினியின் 'கபாலி'யிலும் இணைந்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.