'கபாலி'யின் வார இறுதி வெளிநாட்டு வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,July 25 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படம் கடந்த மூன்று நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் ரூ.85 கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.27 கோடி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரூ.4.25 கோடி, மலேசியாவில் ரூ.14 கோடி, சிங்கப்பூரில் ரூ.5 கோடி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ரூ.23 கோடி, மற்ற நாடுகளில் ரூ.10 முதல் ரூ.12 கோடி என மொத்தம் ரூ.85 கோடி வசூல் செய்துள்ளது.
வார இறுதி நாட்களை கடந்த பின்னரும் 'கபாலி' படத்திற்கு கூட்டம் குறையவில்லை என்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் 'கபாலி' படத்திற்கு நல்ல கூட்டம் வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் அகில இந்திய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

100வது நாளுக்கு பின் 'தெறி'யின் வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி சமீபத்தில் 100வது வெற்றி நாள் என்ற மைல்கல்லை கடந்தது...

இந்திய திரையுலகில் 'கபாலி' செய்த புதிய சாதனை

இந்திய மக்கள் தொகையில் தமிழ் பேசுபவர்களின் மக்கள் தொகை வெறும் 5%தான். ஆனால் ஒரு தமிழ்ப்படம்...

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படத்தில் நாசர்

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வித்தியாசமான படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 29 ஆம் தேதி தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பிறந்த நாள் விழாவில் ரசிகர்களுக்கு சூர்யா வைத்த வேண்டுகோள்

நடிகர் சூர்யா இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இன்று தனது பிறந்த நாளின்போது ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாடினார்.

பாடல்களே இல்லாத த்ரில் படத்தில் ரகுமான்

'நிலவே மலரே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளில் பல படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர் ரகுமான். கடந்த ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.