2016-ல் தசாவதாரம் எடுக்கும் சந்தோஷ் நாராயணன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசை ஜாம்பவான்கள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 'அட்டக்கத்தி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் நான்கே ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளராக உருவாகியுள்ளார்.
தற்போது அவர் ரஜினி, விஜய், தனுஷ், கார்த்தி, செல்வராகவன், உதயநிதி, சந்தானம், விஜய்சேதுபதி, மாதவன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
2016ஆம் ஆண்டில் இதுவரை அவர் பத்து படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் இவ்வருடமே ரிலீஸ் ஆகவுள்ளது. அதுமட்டுமின்றி அவர் இன்னும் பல படங்களில் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கபாலி, விஜய் 60, கொடி, காதலும் கடந்து போகும், இறவி, இறுதிச்சுற்று, சர்வர் சுந்தரம், மனிதன், காஷ்மோரா, செல்வராகவனின் புதிய படம் என தசாவதாரம் எடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments