ரஜினியின் 'கபாலி'யுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

  • IndiaGlitz, [Monday,March 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்க ரிலீஸ் உரிமையை சினி கேலக்ஸி என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இதே நிறுவனம் விஜய்யின் 'தெறி' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சினி கேலக்ஸி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. 'கபாலி', 'தெறி' மட்டுமின்றி சூர்யாவின் '24' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையையும் இதே நிறுவனம்தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் மே மாதம் தேர்தலுக்கு பின்னர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாலிவுட்டில் எண்ட்ரி ஆகிறார் 'அட்டக்கத்தி' நடிகை

'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான 'அட்டக்கத்தி' படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம். முழு விபரங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடக நடிகர்கள் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்....

விஜய்யின் 'தெறி' டிரைலர் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்கள் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...

'தெறி' ஆடியோவுக்கு சமந்தா ஏன் வரவில்லை?

இளையதளபதியின் 'தெறி' ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தாலும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நாயகி சமந்தா....

ஏப்ரல் 1 முதல் சுந்தர் சியின் அடுத்த படம் ரிலீஸ்

பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்து, இயக்கி, நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்....