ஒரே மாதத்தில் கபாலி-தெறி ஆடியோ விழா?

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அவர் கூறியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் அவர் தயாரித்துள்ள இன்னொரு படமான இளையதளபதி விஜய்யின் 'தெறி' திரைப்படத்தின் ஆடியோவும் மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை நெருங்கியுள்ள விஜய் ஆகிய இருவர் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா ஒரே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'தெறி' படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இரவுபகலாக இருப்பதாகவும், இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் 'தெறி' படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 'தெறி' திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பதால் அவர் கூடுதல் முயற்சியுடன் இசையமைத்து வருவதும் இந்த படத்தின் பாடல்கள் 'கில்லி' படப்பாடல்களுக்கு இணையாக இருக்கும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த படத்திற்காக ஹரிஹரன் பாடிய மெலடி பாடல், விஜய் பாடிய பாடல், விஜய்யின் அறிமுகப்பாடலான 'ஜித்து ஜில்லாடி' பாடல் ஆகியவை பெரும் வர்வேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மணிரத்னம் அறிவுரையை மாதவன் ஏற்பாரா?

மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாதவன் மற்றும் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக....

ரஜினியின் 'கபாலி' படத்தில் ஜீவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது....

மிருதன்' படத்திற்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு அந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ஒரு முன்னோட்டம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த், பரத், நகுல் ஆகியோர்கள் கோலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நிலையில் சித்தார்த் பிரபல நடிகர்களில்....

சுசீந்திரனின் 'வில் அம்பு' ஒரு முன்னோட்டம்

'வெண்ணிலா கபடிக்குழு' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு' 'ஜீவா' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன்...