விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் 'கபாலி' நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ரஜினியின் ‘கபாலி’ திரைப்படத்தில் நடித்த நடிகை கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி தற்போது ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ’ஜவான்’ மற்றும் ’காந்தி டாக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்து வருகிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் ராதிகா ஆப்தே நடித்து வருவதாகவும் அவரது கேரக்டர் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே நாயகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' இந்த வார எலிமினேஷன் இவரா? டைட்டில் வின் பண்ணுவாருன்னு நினைச்சோமே..!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் மற்ற மூன்று சீசன்கள் போலவே நான்காவது சீசனுக்கும்

வருண்தேஜ் - லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்.. இன்ஸ்டாவில் அழகிய புகைப்படங்கள்..!

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ள நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

ஹீரோவாக டான்சிங் ரோஸ் நடிக்கும் படம்.. மோஷன் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற அட்டகாசமான கேரக்டரில் நடித்த நடிகர் சபீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன்

மூன்றாவது முறையும் அதே இடத்தில்.. சிவகார்த்திகேயனின் மாஸ் திட்டம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 

அதே கோரமண்டல் இரயில் ..அதே இடம் வியப்பா இருக்கு - கலை இயக்குனர் பார்த்திபன்

சமீபத்தில் ஒடிசாவில்  இரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது இந்த விபத்தும் அன்பே சிவம் படத்தில்  காட்டப்பட்ட இரயில் விபத்தும் ஒரே மாதிரியாக இருந்தது