'கபாலி' நடிகைக்கு கிடைத்த 'ராணி' வாய்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 14 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தன்ஷிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் தன்ஷிகாவின் கேரக்டர் ரஜினிக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

'கபாலி'யின் ராசியால் தன்ஷிகா தற்போது 'காத்தாடி' உள்ளிட்ட ஒருசில படங்களில் பவர்புல் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் புதியதாக அவருக்கு இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு 'ராணி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் பூஜை திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை தன்ஷிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களுடன் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

6500 திரையரங்குகளில் மீண்டும் பாகுபலி. ரூ.1000 கோடி வசூலை நெருங்குமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...

'கபாலி'யின் 'நெருப்புடா' பாடலுக்கு இளையதளபதியின் ரியாக்ஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி 'நெருப்புடா' உள்ளிட்ட...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' டிரைலர் தேதி?

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்'...

சூர்யாவின் 'S3' ஆடியோ ரிலீஸ் எப்போது?

சூர்யா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றதை அடுத்து சூர்யாவின் அடுத்த படமான 'S3'...

பிகினிக்காக 10 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகை

தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ராய்லட்சுமி பாலிவுட்டில் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'அகிரா' படத்தில் அறிமுகமானபோதிலும்...