'தலைவர் 168' படத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பிரமாண்டமான திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.
நேற்றைய முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ’கபாலி’ உள்பட ஒருசில படங்களில் நடித்த விஸ்வநாத் என்ற நடிகரும் இணைந்துள்ளார். இதுகுறித்து விஸ்வநாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
’தலைவர் 168’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டதை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் தினந்தோறும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஏற்கனவே நான் ’கபாலி’ படத்தில் நடித்துள்ளேன். தற்போது மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த சிறுத்தை சிவா அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ’கபாலி’ ஏற்கனவே சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் கணவராகவும் மற்றும் ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I’m Really Happy n it’s a vry Proud momnt in being a part of“Thalaivar 168” 1stDayShoot.yes I’m feeling d most Blessed4 being wid Our 1 n Only Super??Rajinisir once again after d BlockBuster“Kabali”My sincere??to d beloved Dir“Sirutthai”SivaSir forGiving me diz great Opportunity pic.twitter.com/r3q9lQ6QXj
— Kabali Vishwanth (@kabalivishwanth) December 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com