'தலைவர் 168' படத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பிரமாண்டமான திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

நேற்றைய முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ’கபாலி’ உள்பட ஒருசில படங்களில் நடித்த விஸ்வநாத் என்ற நடிகரும் இணைந்துள்ளார். இதுகுறித்து விஸ்வநாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

’தலைவர் 168’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டதை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் தினந்தோறும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஏற்கனவே நான் ’கபாலி’ படத்தில் நடித்துள்ளேன். தற்போது மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த சிறுத்தை சிவா அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ’கபாலி’ ஏற்கனவே சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் கணவராகவும் மற்றும் ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? மனம் திறந்த ஜெய்

தமிழ் திரையுலகில் இளையதலைமுறை கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், நடிகை அஞ்சலியை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும்

தனுஷ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பரபரப்பு அறிக்கை!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 40வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்சேதுபதிக்கு விருதில்லை என்றால் விருதுக்கே பெருமையில்லை: பிரபல ஒளிப்பதிவாளர்

விஜய் சேதுபதிக்கு விருது இல்லை என்றால் அந்த விருதுக்கு பெருமை இல்லை என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் வீட்டில் ரெய்டு நடந்தது உண்மையா? வனத்துறை அதிகாரி விளக்கம்

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார்.

மாணவர்களை அகதிகள் ஆக்கும் அரசு: சென்னை பல்கலையில் கமல்ஹாசன் பேச்சு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் போராடி வரும் நிலையில் இன்று போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்தார்