close
Choose your channels

'கபாலி 2' சாத்தியமா? ரஞ்சித்- தாணு தகவல்

Saturday, July 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ் உடன் முடிக்கப்பட்டிருக்கும். ரஜினியை கொல்ல வரும் இளைஞர் துப்பாக்கியால் சுடும் சத்தம் மட்டுமே கேட்கும். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியாது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

'கபாலி 2' படம் வெளிவருமா? என்ற கேள்விக்கு கரும்பு தின்ன கூலியா? ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக 'கபாலி 2' படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக பேட்டி ஒன்றில் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

அதேபோல் இயக்குனர் ரஞ்சித்தும் 'கபாலி'யின் இரண்டாம் பாகத்தை இயக்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும், ஆனால் இந்த படம் உருவாகுவது ரஜினியின் கையில்தான் உள்ளது என்றும் 'கபாலி' சக்ஸஸ் மீட்டில் தெரிவித்தார். '2.0' படத்திற்கு பின்னர் ரஜினி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை அறிய உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment