close
Choose your channels

தங்கத்தில் மின்னும் சூப்பர் ஸ்டார். இதோ இன்னொரு 'கபாலி' அதிசயம்

Tuesday, July 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட், ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களுக்கு கூட இல்லாத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'கபாலி' படத்திற்கு வித்தியாசமான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். உலகிலேயே முதல் முறையாக ஏர்லைன்ஸ் விளம்பரம், சாக்லேட் விளம்பரம், மாரத்தான் போட்டி, தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் விளம்பரம் என கணக்கில் அடங்காத புதுப்புது வித்தியாசமான புரமோஷன்கள் இந்த படத்திற்காக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
ஆம் 'கபாலி' ரஜினி விரைவில் தங்கத்தில் ஜொலிக்கவுள்ளார். இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான முத்தூட் நிறுவனம் 'கபாலி' ரஜினி உருவம் பதித்த தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்களை சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஒரு திரைப்படத்தின் பெயரில் தங்க நாணயத்தை ஒரு தனியார் நிறுவனம் வெளியிடுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 'கபாலி' படம் ரிலீஸ் ஆக இன்னும் சரியாக பத்து நாட்களே உள்ள நிலையில் இன்னும் என்னென்ன 'முதல்' வெளிவரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment