உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய 'கபாலி' வசனம்
- IndiaGlitz, [Saturday,June 16 2018]
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டியில் உருகுவே அணி, எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவிலும் முடிந்தது
இந்த நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கடைசி இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது ஸ்பெயின் அணி 3 கோல்களும் போர்ச்சுக்கல் அணி 2 கோல்களும் அடித்திருந்தன. இந்த நிலையில் போர்ச்சுக்கல் அணிக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோ மிக அபாரமாக கோல் அடித்து போட்டியை டிரா ஆக்கினார்.
இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த மலையால சேனல் ஒன்று மலையாளத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்தது. ரொனால்டோ 3வது கோலை போட்டதும் வர்ணனையாளர் தன்னையும் மறந்து ரொனால்டோ கோலை புகழ்ந்து 'கபாலி பட வசனத்தை பேசினார். நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ரொனால்டோ வந்துட்டேன்னு சொல்லு, கிறிஸ்டியனோடா!, ரொனால்டோடா என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த வர்ணனையின் வீடியோ இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
Cristiano Ronaldo's third (hat-trick) goal against Spain in #FIFAworldcup2018 with Malayalam commentary. ENJOY! pic.twitter.com/JvUYXVLaqO
— Mohandas Menon (@mohanstatsman) June 16, 2018