'சூரரை போற்று' ஒரு நிமிட வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சாரில் ‘யூ’ சான்றிதழும் பெற்று ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் முதல் படமாக வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி வரும் 23ஆம் தேதி அதாவது சூர்யாவின் பிறந்த நாளில் ’சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘காட்டுப்பயலே’ என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘காப்பான்’ வெளியாகி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தின் ஒரு நிமிட வீடியோ வெளியீடு என்பதுஅவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.