கஜா புயல் நிவாரண நிதிக்காக 'காற்றின் மொழி' படக்குழுவின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

கஜா புயலின் சீற்றத்தால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் சிதறியுள்ள நிலையில் அம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்காக திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான 'காற்றின் மொழி' படக்குழுவும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரில் இருந்து ரூ.2 தமிழக அரசின் ;கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'காற்றின் மொழி' படக்குழுவின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விஜய்சேதுபதி பட வில்லனாக அறிமுகமாகும் தமிழ் நடிகரின் தம்பி

விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர்கள் ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

விஷாலின் அடுத்த படத்திற்கு புரமோஷனை தொடங்கிய அரசியல்வாதி

கோலிவுட் திரையுலகினர் தற்போது ஒரு படத்தின் புரமோஷனுக்கு அரசியல்வாதிகளையே பெரிதும் நம்பியுள்ளனர். வெற்றி பெற வேண்டிய படங்களான 'மெர்சல்', 'சர்கார்' ஆகிய படங்களை சூப்பர் வெற்றி

கேரளா பாணியில் விஜய் செய்த நிவாரண உதவி

சமீபத்தில் கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் வழக்கம்போல் கோலிவுட் திரையுலகினர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

ஜப்பான் நிசான் கார் கம்பெனியின் தலைவர் திடீர் கைது

உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானை சேர்ந்த நிசான் கார் கம்பெனியின் தலைவர் கார்லோஸ் கோஷ் என்பவர் நேற்று அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுளார்.