ஜோதிகா பிறந்த நாளில் 'காற்றின் மொழி' படக்குழுவினர் தரும் பரிசு

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஜோதிகா சம்பந்தபப்ட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

'காற்றின் மொழி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரிலீஸ் அனுமதி குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 18ஆம் தேதிதான் ஜோதிகாவின் பிறந்த நாள் என்பதும், அன்றைய தினத்தில் படக்குழுவினர் ஜோதிகாவுக்கு தரும் பிறந்தநாள் பரிசாகவே இந்த ரிலீஸ் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'துமாரி சூளு' என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காசிஃப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.