ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதற்கேற்க இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது

இந்த நிலையில் அதே ஆயுத பூஜை தினத்தில் விஷாலின் 'சண்டக்கோழி 2' மற்றும் தனுஷின் 'வடசென்னை' திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் போட்டியை தவிர்க்கவும், நல்ல திரையரங்குகள் கிடைக்க வசதியாகவும் ஆயுதபூஜை ரேசில் இருந்து 'காற்றின் மொழி' திரைப்படம் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு பின்னர் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த 'காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் , ப்ரவீண் படத்தொகுப்புல் உருவாகியுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்,.