2.0 புயலிலும் வீழாமல் இருக்கும் 'காற்றின் மொழி'

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

பொதுவாக ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகும்போது அதற்கு முன்னர் வெளியான படங்களை வாரிசுருட்டி கொண்டு போய்விடும். அந்த வகையில் நேற்று ரஜினியின் '2.0' திரைப்படம் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த அனைத்து படங்களும் கிட்டத்தட்ட தூக்கப்பாட்டுவிட்டன.

ஆனால் கடந்த 16ஆம் தேதி வெளியான ஜோதிகாவின் 'காற்றின் மொழி' திரைப்படம் '2.0' புயலையும் தாக்குப்பிடித்து 75 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'காற்றின் மொழி - புயலுக்கு மத்தியில் தென்றலாய் மக்கள் மனதை கொள்ளை கொண்ட 3-வது வாரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'மொழி' படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் ராதாமோகன் படத்தில் ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி திரைப்படம் பெரும்பாலான ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'2.0' வெற்றி: ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொன்ன ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' படத்தின் முதல் நாள் வசூல் பல சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளது.

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு

ரியல் பக்சிராஜா யார் என்று தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று வெளியாகி பல வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.

பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவர் காலமானார்.

தமிழ் சினிமாவில் மிக அரிதாக இருந்த இரட்டை இயக்குனர்களில் ராபர்ட்-ராஜசேகர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வெள்ள நிவாரணப்பணி: நிதி அனுப்ப வேண்டிய மத்திய அரசு பில் அனுப்பிய கொடுமை!

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ள, ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது