டார்லிங் நயன், தம்பி சமந்தா, செம எண்டர்டெய்னர்: 'காத்துவாகுல ரெண்டு காதல்' படம் குறித்து பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாகுல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இதனை அடுத்து இந்த படம் வெற்றிப்படம் என்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .
குறிப்பாக விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் நடிப்பு, நயன்தாரா மற்றும் சமந்தாவின் கிளாமர் உடன் கூடிய நடிப்பு ஆகியவையும் விக்னேஷ் சிவனின் திரைக்கதைக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் எமோஷன், நகைச்சுவை ஆகியவை சம அளவில் உள்ளது என்றும் டார்லிங் நயன்தாரா மற்றும் தம்பி சமந்தா ஆகிய இருவருக்குமே சம அளவில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் விஜய் சேதுபதி ஒவ்வொரு பிரேமிலும் தனது திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும், விக்னேஷ் சிவனின் திரைக்கதை முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்றும், மொத்தத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெ
ரிவித்துள்ளார்.#KRK sema family entertainer full fun ride,good emotions darling #nayan ❤️&Thambi @Samanthaprabhu2 ❤️Both wer 2 treats @VijaySethuOffl enjoyed every frame of u sir @anirudhofficial music was a bliss @VigneshShivN wat a writing❤️completely enjoyed ❤️love 2 the entire team ❤️
— atlee (@Atlee_dir) April 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments