close
Choose your channels

ஓடிடிக்கு வருகிறார்கள் கண்மணி-கதிஜா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, May 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் நடிகை சமந்தாவும் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆனதாக கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் அற்புதமான பாடல்களும் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் தற்போது மே 27ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடியின் டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஓடிடியிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment