'காத்துவாக்குல ரெண்டு காதல்': செம அப்டேட்டை தெரிவித்த விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் செம அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வரும் 11ம் தேதி வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்று அதாவது 2.2.2002 ஆம் தேதியில் சரியாக இரண்டு 2.22 மணிக்கு அறிவித்து உள்ளார் என்பது சிறப்புக்குறியதாகும். மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
’நானும் ரவுடிதான்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீண்டும் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி சமந்தா இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது
Reporting at 2.22 on 2.2.2022
— Vignesh Shivan (@VigneshShivN) February 2, 2022
Teaser from 11.2.2022
April release only only in theatres :) ????❤️?? #KaathuVaakulaRenduKaadhal #teaser from 11.2.22 @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @Rowdy_Pictures @7screenstudio @srkathiir @SonyMusicSouth pic.twitter.com/CMGALsPckk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com