'காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா கேரக்டர்: அட்டகாசமான போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை இந்த படத்தில் விஜய்சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் அவரது கேரக்டர் ராம்போ என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் சமந்தாவின் கேரக்டர் காதீஜா என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சற்று முன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டு அவருடைய அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியானதை அடுத்து காலை முதலே டுவிட்டர் டிரெண்டில் இந்த படம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More News

'ஜெய்பீம்' பார்வதி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கிய ராகவா லாரன்ஸ்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர்களின் உண்மை கதை என்பதை

இந்த வாரமும் நாமினேஷனில் சிக்கிய கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்டவர்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுபவர் குறித்த நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் தெரிந்ததே.

வயதில் சிறியவரை காதலிக்க ஆட்சேபனை இல்லை… நெட்டிசன்களை அலறவிட்ட இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா,

மாலத்தீவு பயணம்… பிகினி புகைப்படத்தை ஷேர் செய்து ஷாக் கொடுத்த இளம் நடிகை!

பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான், அம்ரித் சிங்கின் மூத்த மகள் சாரா அலிகான்.

கேன்சரால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர்