'காத்துவாக்குல ரெண்டு காதல்' சமந்தாவின் கேரக்டர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது என்பதும் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மற்றும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படம் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தாவின் கேரக்டர் மற்றும் அவருடைய புகைப்படம் ஒன்றை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் சமந்தா, காதீஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting #Khatija ?? @Samanthaprabhu2 from #KaathuVaakulaRenduKaadhal ❤️❤️@VijaySethuOffl @VigneshShivN #Nayanthara @anirudhofficial @sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @SonyMusicSouth #KRK #KRKFL #KRKFirstLooks pic.twitter.com/8veqbLW8Jv
— Seven Screen Studio (@7screenstudio) November 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments