close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் சூப்பர் அப்டேட்!

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் திரையரங்கில் வெளியாகுமா? அல்லது ஓடிடியில் வெளியாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.

முதல்கட்டமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த போஸ்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை லலித்குமார் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment