'சூர்யா 37' டைட்டிலில் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,January 01 2019]

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யாவின் 37வது படத்தின் டைட்டில் இன்று அதிகாலை புத்தாண்டு பிறந்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10 மணிக்கு வெளியாகும் என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'மீட்பான்', 'காப்பான்' மற்றும் 'உயிர்கா' ஆகிய மூன்று டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டு ரசிகர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் பெரும்பாலான ரசிகர்கள் 'உயிர்கா' டைட்டிலை தேர்வு செய்தனர். ஆனால் படக்குழுவினர் இந்த படத்திற்கு 'காப்பான்' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

பிரதமர் கேரக்டரில் நடிக்கும் மோகன்லாலை பாதுகாக்கும் கேரக்டரில் சூர்யா நடித்து வருவதால் இந்த படத்திற்கு 'காப்பான்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.