சூர்யாவின் 'காப்பான்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் 'காப்பான்'. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு தேதி நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை படத்திற்கு எம்எஸ் பிரபு மற்றும் அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.
Announcement ?? of The Grand Audio ?? Launch of #KAAPPAAN - tomorrow morning at 11am ??. Get Ready to celebrate @Suriya_offl ?? Birthday ????????@anavenkat @Mohanlal @Jharrisjayaraj @arya_offl @sayyeshaa @bomanirani @thondankani @SonyMusicSouth
— Lyca Productions (@LycaProductions) July 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com