'காலா' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை பரபரப்பாக்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 'காலா' படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகத்திற்கும் பரவிவிட்டதா நிபா வைரஸ்? மருத்துவர்கள் விளக்கம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். வெளவால்கள் மூலம் பரவி வரும் இந்த கொடுமையான நோய், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரவிவிட்டதாக அச்சம் தரும்

மீண்டும் ஆர்.கே.நகர் பரபரப்பாகுவது எப்போது?

அரசியல் நையாண்டி படங்கள்  எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில்  பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன.

தோனி இந்தியாவின் பிரதமர் வேட்பாளரா? பிரபல இயக்குனரின் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை பிரித்து மேய்ந்து மிக எளிதில் சாம்பியன் பட்டம் பெற்றது.

தமிழகம் முழுவதும் வலம் வரும் 'கோலி சோடாவின்' ஜிஎஸ்டி வண்டி

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தின் புராமோஷனும் ரொம்ப முக்கியம். நல்ல படங்கள் கூட சிலசமயம் சரியான புரமோஷன் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளன

மூன்றாவது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்ற 'இரும்புத்திரை'

தற்போதைய திரைப்படங்கள் 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடுவதே பெரிய விஷயம் என்ற நிலையில் 'இரும்புத்திரை' 3வது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.