காலா டீசர்: ரஜினி ரசிகர்களுக்கு திடீர் ஏமாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டீசர் வெளியாக இன்னும் ஒருசில நிமிடங்களே இருப்பதால் ரஜினி ரசிகர்கள் டீசரை வரவேற்க மிகுந்த ஆர்வத்தில் இணையத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் மறைவை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி வெளியாகவிருந்த 'காலா' படத்தின் டீசர், மார்ச் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் 'காலா' படத்தின் டீசரை எதிர்நோக்கி காத்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனுஷின் இந்த அறிவிப்பு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தபோதிலும் ஒருநாள் மட்டுமே தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.