'காலா' படக்குழுவினர்களின் முடிவில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம். இருப்பினும் இந்த படத்தில் உள்ள 14 முக்கிய காட்சிகளை சென்சார் அதிகாரிகள் கட் செய்ததால் இயக்குனர் ரஞ்சித் உள்பட படக்குழுவினர் அதிருப்தியில் இருந்தனர். மேலும் ரஜினி படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்தால் குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகம் தியேட்டருக்கு வர வாய்ப்புள்ளது என்ற கருத்தும் படக்குழுவினர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் 'காலா' படத்தை மறு சென்சாருக்கு அனுப்ப அதாவது ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிவைசிங் கமிட்டியில் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நானாபடேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல் ஹீமா குரேஷி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தால் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது இயக்குனரின் உதவியாளர்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது

நடிகர் சங்கத்தின் அறப்போராட்டம்: முதல் நபராக மேடையேறிய தளாபதி விஜய்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடிகர் சங்கம் சார்பில் அடையாள அறப்போராட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்: அசத்தும் இந்திய வீராங்கனைகள்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் என்ற வீராங்கனை பளுதூக்கும் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் இன்று தங்கம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 222 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்: இந்தியா அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தங்கம் பெற்றுவிடும்போல் தெரிகிறது.

சல்மான்கான் ஜாமீன் மனு: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.