'காலா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன்னர்  'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 'காலா' படத்தின் அனைத்து மொழிகளுக்கும் அதிகாரபூர்வமான சாட்டிலைட் பார்ட்னர் ஸ்டார் நெட்வொர்க் என்று அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல வட இந்திய சாமியார் ஆசாராம்பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவந்தது.

விஜய் ஆண்டனியின் 'காளி' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி

படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு: தேசிய விருது பெற்ற நடிகை

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களில் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வருகின்றனர். 

சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.