'காலா' ரிலீஸ் எப்போது? இயக்குனர் பா.ரஞ்சித் தகவல்

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை சற்றுமுன்னர் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காலா திரைப்படம் வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், ஷங்கரின் 2.0 திரைப்படம் வெளியான பின்னர் 'காலா' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பா.ரஞ்சித் தனது பேட்டியில் 'மெர்சல்' ஜிஎஸ்டி வசனம் குறித்து கருத்து தெரிவித்தபோது, 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வசன காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அந்த காட்சியை நீக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.

More News

ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: எச்.ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஏற்கனவே பாஜக தலைவர்களான தமிழிசை செளந்திரராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் எச்.ராஜா

ஜிஎஸ்டிக்கு எதிரான 'மெர்சல்' வசனம் சரியா? தவறா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல சோதனைகளை சந்தித்த நிலையில் தற்போது ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

மெர்சலுக்கு எதிரான தமிழிசையின் கருத்து ஜனநாயக விரோதம்: திமுக பிரமுகர் கருத்து

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் காட்சிகளை நீக்க கோரி தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்திருப்பது ஜனநாயக விரோதத்தின் உச்சகட்டம் என்று திமுக பிரமுகர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தளபதியின் மெர்சலுக்கு தமிழிசையை அடுத்து மத்திய அமைச்சரும் எதிர்ப்பு

விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி உள்பட ஒருசில வசனங்களுக்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும்.

நான் 'மெர்சலாயிட்டேன்': 'மெர்சல்' படக்குழுவுக்கு குஷ்பு பாராட்டு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.