'காலா' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரண்டாவது நாளாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவர் நடித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்குகின்றன

 KNACK ஸ்டூடியோவில் நடைபெறும் டப்பிங் பணிக்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தனுஷ் தயாரிக்கும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர்,  சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே,  அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையில் முரளி ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டின் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நமது உண்மையான ஆஸ்தி இதுதான்: ரஜினிகாந்த்

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 2வது நாளாக ரசிகர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

'இரும்புத்திரை'யில் ஆக்சன் கிங் அர்ஜூன் கேரக்டர்

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' படத்தில் விஷால் மேஜர் கதிரவன் கேரக்டரிலும், சைக்காலஜி டாக்டர் ரதிதேவி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர்

கொலைகார குப்பத்தை பார்வையிட வேலைக்காரன் படக்குழுவினர் சிறப்பு ஏற்பாடு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரிய ஸ்டார்களின் படத்திற்கு இணையான ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது

பிறந்த நாள் அன்று 'வேலைக்காரன்' படம் பார்த்த 92 வயது அரசியல்வாதி

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, எளிமைக்கு உதாரணமானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.

ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலி: நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி

நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நேற்று விபத்தில் ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.