பிக்பாஸ் காஜலை மறந்துவிட்ட 'காலா' டான்ஸ் மாஸ்டர்
- IndiaGlitz, [Tuesday,August 29 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் டைட்டில் பாடல், மற்றும் கிளைமாக்ஸ் பாடல் ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரஜினிக்கு நடனப்பயிற்சி அளித்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சாண்டி கூறியபோது, 'இயக்குனர் ரஞ்சித் தனக்கு நீண்ட நாள் நண்பர். 'கபாலி' படம் முடிந்தவுடனே அடுத்த படத்திற்கு அவரிடம் சான்ஸ் கேட்டு சென்றேன். அதை மனதில் வைத்து சரியான நேரத்தில் 'காலா' படத்தில் என்னை அழைத்து கொண்டார் என்று கூறினார்.
'காலா' படத்தின் டைட்டில் பாட்டுக்கும், கிளைமாக்ஸ் பாட்டுக்கும் ரஜினிக்கு நடனப்பயிற்சி அமைத்தது மறக்க முடியாத நினைவுகள் என்று கூறிய சாண்டி, ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டெப்களை புரிந்து கொண்டு சூப்பராக ஆடியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பிக்பாஸ் காஜல் இவருடைய முன்னாள் மனைவி ஆவார். காஜல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்த்த சாண்டி அவரை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். இப்போது எனக்கு வேறு திருமணம் முடிந்துவிட்டது. என்னுடைய மனைவி சில்வியா தான் எனக்கு எல்லாம். தயவுசெய்து காஜல் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.