4000 பேர் சுற்றி நின்று கைதட்டிய காலா வசனம்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டதால் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு ரஜினி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய திலீப் சுப்பராயன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்று இன்று வரை இணையதளங்களில் வைரலாகி வரும் 'கியாரே செட்டிங்கா? வேங்கையன் மகன் ஒத்தையல நிக்கிறேன், தில்லுருந்தா மொத்தமா வாங்கலே' என்ற வசனத்தின் படப்பிடிப்பின்போது அங்கு சுற்றி நின்றிருந்த சுமார் 4000 பேர் கைதட்டியதாக திலீப் தெரிவித்துள்ளார்.

மேலும் டிரைலரில் உள்ள நெருப்புடன் கூடிய சண்டைக்காட்சி கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி என்றும், மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் 95% ரஜினியே டூப் இல்லாமல் நடித்துள்ளதாகவும் திலீப் கூறியுள்ளார். ஒரு ரஜினி ரசிகனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் இருக்கும் என்றும், ரஜினி இந்த வயதிலும் எனர்ஜியுடன் நடிப்பதால் தான் அவர் இன்னும் சூப்பர் ஸ்டாராக இருப்பதாகவும் திலீப் மேலும் கூறியுள்ளார்.