வெளிநாட்டிலும் 'காலா' ரிலீசுக்கு சிக்கல்? அதிர்ச்சியில் படக்குழுவினர்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட ரிலீஸ் தேதியின் கவுண்டிங் ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் கடைசி கட்ட புரமோஷன்கள் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் மட்டும் அங்குள்ள திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் மட்டுமின்றி ஒருசில வெளிநாடுகளிலும் இந்த படத்தின் ரிலீசுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகா, நார்வே, சுவிஸ் என தடையின் இடங்கள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'காலா'வை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் தடையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தமிழிசை குறித்து அவதூறு வீடியோ: திருச்சி இளம்பெண் அதிரடி கைது

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குறித்து அவதூறான வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அடல்ட் காமெடி படங்கள் தொடருமா? கவுதம் கார்த்திக் பதில்

'ஹரஹர மகாதேவி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய இரண்டு அடல்ட் படங்களில் அடுத்தடுத்த நடித்தvar நடிகர் கவுதம் கார்த்திக்

பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்

தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்